Srirangam: ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் கார்த்திகை மாதத்தில் திறந்தது
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசம் திறக்கப்பட்டது
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசம் திறக்கும் உற்சவம் இன்று நடைபெற்றது. வைணவத்தில் மிகவும் முக்கியமான மாதம் மார்கழி. மார்கழியில் வரும் ஏகாதசி திருநாள், அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஏகாதசி வருவதைப் பொருத்து, அதற்கு முன்னதாக பெருமாளின் பரமபத வாசல் திறக்கப்படும். சில ஆண்டுகளில் இந்த உற்சவம் கார்த்திகை மாதத்தில் நடைபெறும். பொதுவாக மார்கழி மாத சுக்கில பட்சயை பொருத்தே வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் திட்டமிடப்படும்.
இந்த ஆண்டு, 19 வருடங்களுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை 4.44 மணிக்கு திறக்கப்பட்டது. ரத்தின அங்கியில் ஸ்ரீரங்கநாதர் (Srirangam Ranganatha Swamy) எழுந்தருளினார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, இந்த நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
19 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கநாதர், பகல்பத்து, ராப்பத்து ஆகிய 20 நாட்களும் முத்தங்கியில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் மார்கழி மாதம் இறுதியிலும், தை மாதம் முதல் நாட்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் தொடங்கிவிட்டது.
ALSO READ | ஸ்ரீரங்கநாதர் கோவிலும் ஜாஹிர் ஹீசைன் விவகாரமும்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR