சென்னை செரினிடி ரோட்டரி சங்கம், சென்னை இன்டஸ்ட்ரியல் சிட்டி ஆர்சி மற்றும் சென்னை மில்லினியம் ஆர்சி ஆகியவை இணைந்து தொடர்ந்து 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை டேக் ரோட்டரி செரினிடி கோப்பை 2023 என்ற பெயரில் நடத்துதுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டை மாணவர்களிடையே ஊக்கப்படுத்தவும், அவர்களிடம் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப், லீடர்ஷிப் மற்றும் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டிக்குக் கிடைத்து வரும் ஆதரவு கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்த நிலையில் தற்போது நான்காவது ஆண்டாக இப்போட்டி நடைபெற உள்ளது. டேக் செரினிடி கோப்பை 2023 போட்டியை மிகப் பெரிய அளவில் நடத்துவதன் மூலம் இளம் கிரிக்கெட் வீரர்கள் பள்ளி பருவத்திலேயே திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என போட்டி நடத்தும் நிர்வாகத்தினரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | சென்னை தான் ஸ்டாலினுக்கு செல்லப்பிள்ளை - சேகர் பாபு!


சாய் சுதர்ஷன்:


இந்த போட்டியின் முந்தைய போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்காக குஜராத் டைட்டன் அணியில் இடம்பிடித்துள்ளார். இதே போல விமல்குமார் தற்போது 19 வயதுக்குட்பட்ட தமிழக அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டியில் முன்னாள் போட்டியாளராக இருந்த மனவ் பராக், தற்போது 19 அணியில் பிரிவில்
வயதுக்குள்பட்டோருக்கான தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடி வருகிறார். இவர்களைப் போல பலர் டிவிஷன்களில் கிரிக்கெட் போட்டிக்கான அணிகளில் அதாவது சுபாங் மிஸ்ரா, முகமது அலி, அனிருத் சேஷாத்ரி, ராகுல் ஐயப்பன் போன்றவர்கள் விளையாடி வருகின்றனர்.


இப்போட்டியை நடத்தும் குழுவின் ஆலோசகர் யுஆர் ராதாகிருஷ்ணன் இது குறித்து கூறியது:


"இந்த கிரிக்கெட் போட்டியானது இளம் கிரிக்கெட் வீரர்கள் பள்ளி பருவத்திலேயே தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, அடுத்த கட்டத்தில் அவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பை மாநில அளவில் உருவாக்கித்தருகிறது. ரஞ்சி கோப்பை போட்டிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் தலைவராக தான் இருப்பதால் தன்னால் பள்ளி மாணவர்களில் திறமையானவர்களை எளிதில் தேர்வு செய்யவும் அவர்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை அளிப்பதாகவும் இது அமையும்” என்று பேசியிருந்தார்.


தமிழ்நாடு மற்றும் இந்திய ரயில்வே அணியின் முன்னாள் வீரர் ஆர்.வெங்கடேஷ் இது குறித்து கூறியது:


”மாணவர்கள் தங்களது பள்ளி காலத்தில் செயற்கை புல் தளத்தில் (டர்ப்) விளையாடும் வாய்ப்பைப் பெறுவதில்லை. பெரும்பாலும் டி20 மற்றும் 30 ஓவர் போட்டிகளில் விளையாடும்போதுதான் அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்தப் போட்டியில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு டர்ப் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் நீண்ட நேரம் அதாவது 50 ஓவர் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டியானது மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாகும். இப்போட்டிகளில் அவர்கள் சிறப்பாக விளையாடினால் அவர்கள் நிச்சயம் வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அல்லது நகர அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.


அட்டவனை:


இந்தப் போட்டிகள் ஜூன் 23-ம் தேதி 2023-ல் தொடங்கி ஜூலை 2023 முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளுமே டர்ப்பில் நடைபெறுவதோடு நான்கு மைதானங்களில் ஒரே சமயத்தில் லீக் சுற்று அடிப்படையில் நடைபெற உள்ளது. அழைப்பின் பேரில் 16 பள்ளி அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இதில் இரண்டு வெளியூர் அணிகளும் அடங்கும். பங்கேற்கும் அணிகள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் நான்கு அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு மண்டலத்திலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இவை இரண்டு நாள் நடைபெறும். இறுதிப் போட்டி மூன்றாவது நாள்
இறுதிப் போட்டி நடைபெறும். இந்தப் போட்டிகள் அனைத்துமே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் (டிஎன்சிஏ) அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் (அம்பயர்கள்) மற்றும் ஸ்கோரர்களைக் கொண்டு நடத்தப்படும். இதில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.


ஆடி செட்டி எண்டோமென்ட் விருது- கல்வி உதவித் தொகை திட்டமாக சென்னை செரினிடி ரோட்டரி சங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடர இது வழங்கப்படுகிறது. இந்த விருதானது கிரிக்கெட் பயிற்சியாளர் திரு ஆடி செட்டி பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாட்டில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஆற்றிய தன்னலமற்ற பணியை பாராட்டும் வகையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. டேக் ரோட்டரி செரினிடி கோப்பை 2023-ல் சிறப்பாக விளையாடும் தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். டேக் ரோட்டரி செரினிடி கோப்பை 2023-ல் தனி நபர்களின் திறமையை சிறப்பிக்கும் வகையில் மேன் ஆப் தி மேச் (ஆட்ட நாயகன்) தவிர்த்து ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடுவோரையும் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட உள்ளது.  இந்த விருதுகள் அனைத்துமே அவர்களது திறமையையும், கடின உழைப்பையும் பாராட்டும் விதமாக போட்டியின்போது வழங்கப்படும்.


விருதுகள்:


கீழ்காணும் தனி நபர் விருதுகள் ஒவ்வொரு போட்டியின் இறுதியிலும் வழங்கப்படும். போட்டியைக் காண வரும் சிறப்பு தலைமை விருந்தினர்கள், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மூலம் விருதுகளை வழங்கி அவர்களை
மேலும் ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-சிறந்த வீரர்
-சிறந்த பந்து வீச்சாளர்
-சிறந்த விக்கெட் கீப்பர்
-சிறந்த பேட்ஸ்மேன்
-சிறப்பாக பீல்டிங் செய்தவர்
-சிறந்த ஆல் ரவுண்டர்


மேலும் படிக்க | இன்றைய முக்கிய செய்திகள் உங்களுக்காக!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ