சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரி உயர்ததப்பட்டதால் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்ட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.76 என நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது.


பெட்ரோல் மீதான வாட் (VAT) வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அது போல், டீசல் மீதான வாட் (VAT) வரி 21.43 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.78 மற்றும் டீசல் லிட்டருக்கு 1.76 உயர்த்தப்படுகிறது. இது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 


இதற்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்து இதனை திரும்ப பெறாவிட்டல் மாநிலம் தழுவிய போரட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. 


தமிழக அரசு இன்று இரவுக்குள் வாட் (VAT) வரி உயர்வை திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர்.