சென்னை: சுனாமி தாக்குதல் நடந்து, 12 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, சென்னை மெரினாவில் இன்று ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த டிசம்பர் 26, 2004-ம் ஆண்டு சென்னை, நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி மற்றும் பூம்புகார் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை சுனாமி எனப்படும் பேரலைகள் தாக்கின. இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, பலர் குடியிருப்புகளை இழந்து, நிர்க்கதியாக, நின்றனர். பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது.


சுனாமி தாக்குதல் நடந்து, 12 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில், இன்று காலை ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். மக்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தியும், கடலில் பால் கொட்டியும் அஞ்சலி செலுத்தினர். 


மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் படகுகள் நிறுத்தப்பட்டன. பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.