நேற்று முன்தினம் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக வாகன ஓட்டி விபத்து ஏற்பட்ட நிலையில் முதற்கட்டமாக காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், பிறகு சென்னை கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகள் காஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது, மேலும் 3 பிரிவுகள் சேர்த்து பிணையில் வர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து துறை ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அவர் காஞ்சிபுரம் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | I.N.D.I.A கூட்டணி தொகுதி பங்கீடு.. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை\



அதிவேகமாக பைக்குகளை ஓட்டி இணையத்தில் மோகத்தை ஏற்படுத்திவரும் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இவர் மஞ்சள் வீரன் என்கிற படத்திலே தற்போது நடித்தும் வருகிறார்.  இந்த நிலையில் TTF வாசன் சென்னையிருந்து-மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவர் உடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது ஒருவரைக்கொருவர் முந்தி பைக் ரேஸில் ஈடுபட்டதும் அதிவேகமாக வாகனத்தினை இயக்கி ஸ்டண்ட் என்று சொல்லப்படக்கூடிய வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார். மேலும் வரக்கூடிய வழிகளில் தனது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படக்கூடிய FOLLOWERS களை வரவழைக்கும் தொடர்ந்து தான் வரும் இடங்கள் குறித்து சமூகவளைதளங்களிலே பதிவிட்டிருக்கிறார். 


இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீல்லிங் சாகசத்தில் ஈடுபட்ட TTF வாசன் பைக்கின் பின்புறமானது சாலையில் தேய்ந்து நிலைதடுமாறி பைக்கானது இரண்டு மூன்று முறை தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் TTF வாசனுக்கு படுகாயமானது ஏற்பட்டு காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவரது கைக்கு மாவுகட்டானது போடப்பட்டு கால், உடல் போன்ற உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுக்கு சகிச்சைகளானது அளிக்கப்பட்டது. இதனையெடுத்து தான் சென்னையில் சகிச்சை பெற்று கொள்ளவதாக கூறிய நிலையில் அவரது நண்பர்கள் அவரை அழைத்து சென்றிருக்கின்றனர்.  இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக TTF வாசன் மீது  279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 338 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது என  இரண்டு பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.  தற்போது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ