Video: மருத்துவமனையில் TTF வாசன்... பைக்கில் வீலிங் அடிக்கும் போது விபத்தில் சிக்கினாரா?
TTF Vasan Accident: பிரபல யூ-ட்யூபரான டிடிஎப் வாசன் காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன.
TTF Vasan Accident: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல யூ-ட்யூபரும், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாக உள்ளவருமான டிடிஎப் வாசன் இருச்சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வீலிங் அடிக்க முயன்ற போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீலிங் செய்தபோது விபத்தா?
டிடிஎப் வாசன் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே கோயம்புத்தூர் செல்லும்போது அதி வேகமாக சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, வாகனத்தின் முன் சக்கரத்தை அந்தரத்தில் தூக்கி சாகசம் (Wheeling) செய்ய முற்பட்டபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி உள்ளார்.
மேலும் படிக்க | கன்னியாகுமரியில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
வெளியான வீடியோ
குறிப்பாக, அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சாலை ஓரம் தடுப்பில் மோதி பறந்து விழுந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் அவர் காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், சென்னைக்கு அழைத்துச் சென்று இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்தின் சிசிடிவி காட்சி என கூறப்படும் ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இளசுகளின் பிரபலம்
சில மாதங்களுக்கு முன் டிடிஎப் வாசன் வந்த கார் ஒன்று சென்னையில் விபத்தில் சிக்கியது. சமூக வலைத்தளத்தில் பைக் ரேஸ் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர், டிடிஎப் வாசன். இவருக்கு மிக பெரிய அளவில் சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி பருவமுடைய பல இளைஞர்கள் இவர் மீது வெறியாக இருப்பார்கள். இவரை போல பைக் ரேஸ் செய்ய வேண்டும் என நினைத்து பலர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.
'மஞ்சள் வீரன்' நாயகன்
அவ்வப்போது இவர் பல சர்ச்சைகளில் சிக்கி காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு மேல் வழக்கை வாங்கி உலா வரும் 'பிரபலமாக' மாறி இருக்கிறார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என பெயரிடப்பட்டுள்ளது. எனினும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரமோ அல்லது படத்தின் வெளியீட்டு தேதியோ வெளியாகவில்லை. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பூஜை தொடர்பான தகவல்கள் மட்டும் வெளியானது.
மேலும் படிக்க | பேரனை பார்க்க கோவைக்கு விசிட் அடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ