சேலம்: மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோம் செய்ததாக டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 36 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 29-ந் தேதி சேலத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் தலைமையிலான டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது.


இந்த பிரசுரங்களில் அதிமுக(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.கே.செல்வம், பெங்களூரு கே.வெற்றிவேல், சேலம் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி ஆகியவர்களது உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன.


இந்நிலையில் டிடிவி தினகரன், அவரது ஆதரவாளர்கள் 16 பேர் மற்றும் பிரசுரங்களை வினியோகித்த 20 நபர்கள் என மொத்தம் 36 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் அன்னதானப்பட்டி காவல்துறையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சரவணன் புகார் கொடுத்ததன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து டிடிவி தினகரன் என்னேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.