கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் முக்கிய புள்ளிகள் - டிடிவி தினகரன் கொடுத்த அப்டேட்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டிடிவி தினகரன், இத்தனை உயிரிழப்புகளுக்கும் திமுக முக்கிய புள்ளிகளே காரணம் என குற்றம்சாட்டினார்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த டிடிவி தினகரன், தனக்கு வந்த தகவலின்படி 20 பேர் உடல் சீராக இல்லை, சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரனகுணமடைந்து வரவேண்டும் என கூறினார். கள்ளச்சாரய இறப்பிற்கு முழு காரணம் ஆட்சியாளர்களின் முழு தோல்வி, ஆளும் கட்சியை சார்ந்த நிர்வாகிகளே பொறுப்பு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தான் காரணம் என குற்றஞ்சாட்டினார்.
டிடிவி தினகரன் மேலும் பேசும்போது, காவல் நிலையம் அருகே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. கள்ளசாராய விற்பனை தொடர்பாக முதல்வருக்கு தெரிந்ததா?, இல்லை தெரிந்தும் அமைதி காத்தாரா? என கேள்வி எழுப்பினார். ஆளும் கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை தனக்கே பயமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலினே கூறியிருப்பதாகவும், உயிரிழப்பிற்கு காரணம் கள்ளக்குறிச்சியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிரவாகிகள் தான் காரணம் என கூறினார். ஆளுங்கட்சியினர் காவல் துறையினரை செயல்படாமல் வைத்துள்ளனர். தமிழக முதல்வர் இதற்கு முழு பொறுப்பேற்று காரணங்கள் சொல்லாமல் இனிமேலாவது தமிழகத்தில் இது போன்று நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | வயிற்று பிழைப்பிற்காக சென்ற மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!
ஆட்சி பொறுப்பில் இருக்கும் வரையாவது அதனை பார்த்து கொள்ளவேண்டு, இதற்கு துறை அமைச்சர் முத்துசாமி பொறுபேற்று கொள்ள வேண்டும், ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகமும், ஆளும் கட்சியினர் தலையீட்டால் தான் சாராய விற்பனை செய்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். துறை அமைச்சர் முத்துசாமி தான் காரணம் என குற்றம்சாட்டிய அவர், நிர்வாக கோளாறு, கட்சி நிர்வாகியை கட்டுபடுத்தி காவல் துறையையும் மாவட்ட நிர்வாகத்தையும் சரியாக செயல்பட விட வேண்டும் என வலியுறுத்தினார். ஒரு நபர் கமிஷன் தூத்துக்குடி சம்பவத்தில் விசாரனை நடத்தி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
அது போன்று விஷ சாராய வழக்கும் அமைந்துபோகும், ஒரு வாரத்திற்கு காந்தியை போல் திமுக அரசு செயல்படும், பொதுமக்களே கள்ளசாராய விற்பனைக்கு சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்கள் தான் காரணம் என கூறுகிறார்கள் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். மக்கள் சொல்வதை தான் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாகவும், அதனால் தான் சிபி ஐ விசாரனை தான் சரியான நடவடிக்கையாக இருக்கும், கள்ளசாராய விற்பனை தடுக்க சிபி ஐ விசாரணை நடத்தினால் தான் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் திருந்துவார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திமுக கட்சிகாரர்கள் தான் உயிரிழப்பிற்கு காரணம் என்பதால் முதலமைச்சர் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை என தனக்கு தோன்றுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மரக்காணம் விற்பனைக்கு பிறகு சாராய விற்பனையை தடுத்துவிட்டதாக கூறினார்கள், ஆனால் மீண்டும் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்த டிடிவி, உயிரிழந்த குடும்பத்தினருக்கு பத்து லட்சம் அறிவிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடாமல் இருக்க தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். விஷ சாராய வழக்கில் முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் டிடிவி தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ