கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், கொள்ளக்காக திட்டமிட்டது பற்றி தெரிவிக்கின்றனர். முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் தெரிவித்துள்ளார்.



கொடநாடு சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றமே தாமாக முன்வந்து தனது முழு கட்டுப்பாட்டில் இந்த விவகாரத்தினை விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.