அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்...
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மேல் மட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் மூழ்கினர். இதனைத்தொடர்ந்து அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அக்கட்சியிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுக, அதிமுகவில் இணையத் துவங்கினர்.
மேலும், தினகரனுக்கு நம்பிக்கை உரியவராக திகழ்ந்த பாப்புலர் முத்தையா அதிமுக-விலும், அமமுக கொள்ளை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் திமுக-விலும் இணைந்தனர். இதற்கிடையே அமமுக-வில் தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தாய் கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வருவதால் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் அமமுகவில் இருந்து விலகி திமுக அல்லது அதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் கசிந்தன. இதனை அறிந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பழனிப்பனை சரிகட்டும் விதமாக அவருக்கு துணை செயலாளர் பதவியை அளித்துள்ளார். மற்றொருவான தஞ்சை ரெங்கசாமிக்கும் துணை செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.
அதேபோல், அமமுக பொருளாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பி.வெற்றிவேலும், அமமுக கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன் விலகலை அடுத்து சி.ஆர்.சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமமுக தலைமை நிலையச் செயலாளராக திருச்சி ஆர்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,