எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி பதி ஆகியவற்றில் அவர் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தெரிவிக்கையில்...


தமிழகம் முழுவதும் தான் சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும், இதன் மூலம் மக்கள் தங்கள் பக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார். மேலும் அம்மாவின் பெரும்பாலான தொண்டர்களும் தங்கள் கட்சியில் தான் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என தெரிவித்த அவர், இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அதிமுக பெரிய வெற்றியை பெறப் போவதில்லை என தெரிவித்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போல் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
பாராளுமன்ற தேர்தலில் சின்னத்துக்கு முக்கியத்துவம் இருக்கப்போவதில்லை. அதிமுக - திமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் அமமுக வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.