தமிழக இளைஞரை NASA பாராட்டியிருப்பது பெருமைக்குறியது... TTV!
விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளர் சண்முக சுப்பிரமணியத்தை மனமார பாராட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளர் சண்முக சுப்பிரமணியத்தை மனமார பாராட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "சந்திராயன் 2 விண்கலத்துடன் அனுப்பப்பட்டு, கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளரான மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.
இதற்காக அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா அவரைப் பாராட்டி இருப்பது பெருமிதம் தருகிறது. தமிழக விஞ்ஞானிகளின் சிறப்பான பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்ட இந்தியாவின் கனவுத்திட்டமான சந்திராயன் 2, நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு அளிக்கிறது." என குறிப்பிடுடள்ளார்.
முன்னதாக, நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து ஜூலை 22-ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.
இதனிடையே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தது. இந்நிலையில் விக்ரம் -2 லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பதுகண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக ஆய்வு செய்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன், விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை கண்டுபிடித்து நாசாவுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அவரது ஆய்வை நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த செய்தியினை அடுத்து தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுகள் பல குவிந்த வண்ணம் உள்ளது.
நாசாவுக்கே உதவி செய்த தமிழக மாணவன், சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.