மற்றொரு அதிமுக அமைச்சர் பதவியை தினகரன் பறிப்பு!
அதிமுக அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு தனக்கு எதிரானவர்கள் பலரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக தினகரன் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
தனக்கு எதிரான எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் கட்சி பதவியை பறிப்பதாக அறிவித்து வந்த தினகரன் நேற்று முதல்வரையே கட்சி பதவியிலிருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக எஸ்.அன்பழகன் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார்.