கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாகளில் பங்கேற்கவும், தனியார் நிகழ்வுகளில் பங்கேற்கவும் வந்திருப்பதாக தெரிவித்தார். தேர்தல் அரசியலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்று, ஒரு கட்சி முதலமைச்சரை தேர்வு செய்கிறது எனவும், இதில் பிறப்பால் ஒருத்தர் முதலமைச்சராக வருவது என்று ஆதவ் அர்ஜூனா சொல்வது புரியவில்லை எனவும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் நின்று ஜெயித்தவர், அதை எப்படி குறை சொல்ல முடியும் என தெரிவித்தார். தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு பிறகு அவர்கள் வருகின்றனர். திட்டமிட்டு புரோமசன் கூடாது என்பது உண்மை எனவும், ஆனால் அதையும் மீறி மக்கள் வாக்களித்து வருவதை எப்படி தடுக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசுகிறார்கள்...' விஜய்யை மறைமுகமாக தாக்கிய சேகர்பாபு


அரசியலில் சீனியாரிட்டி என்பது முக்கியம்தான் அது சில பதவிகளுக்கு எனவும், கட்சி பதவிகள் ஆட்சி பதவிகளுக்கு சீனியாரிட்டி மாத்திரமே ஒரு காரணமாக அமைவது இல்லை எனக்கூறிய அவர், நான் எதார்த்தத்தை சொல்கிறேன், திமுகவை ஆதரித்தோ, வாரிசு அரசியலை ஆதரித்தோ பேசவில்லை, எதார்த்தத்தை பேசுகின்றேன் என தெரிவித்தார். பிறப்பால் ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்பதற்காக முன் நிறுத்தக்கூடாது என்பதாக ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தால், தேர்தலில் நின்று மக்கள் அவரை ஏற்றுக் கொண்டால் அது எப்படி தவறாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். எல்லா கட்சியும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது இயற்கை. இதில் அகம்பாவம், ஆணவம் எல்லாம் இருப்பதாக தெரியவில்லை.


தயவு செய்து திமுகவை ஆதரித்து பேசுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம், எதார்த்தத்தை பேசுகிறேன் எனவும் தெரிவித்தார். ஆணவத்தோடு இருக்கின்றனர் என சொல்வது எந்தளவிற்கு சரி என தெரியவில்லை என தவெக விஜய் கூறிய கருத்துக்கு பதில் அளித்தார். அமமுக தேஜ கூட்டணியில்  இருக்கின்றோம், இதை பலப்படுத்த எங்களுடன் வரும் கட்சிகளை ஏற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார். தே.ஜ.கூ ஆட்சி அமைக்கவும், இந்த தேர்தலில் ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்குவதற்காகவும் எங்கள் கூட்டணி முயற்சி செய்யும் என தெரிவித்தார். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு, முறைகேடு புகார்கள் இருக்கிறது எனவும் மழை பாதிப்பை இந்த அரசு முறையாக கையாளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். பல மூத்த அமைச்சர்கள் இருந்தாலும் இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது, 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாக இருக்கிறது எனவும் 2026 தேர்தலில் மக்கள் மன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தெரிவித்தார்.


அதிமுக ஆட்சிப் பொறுப்பை எடப்பாடியிடம் கொடுத்த பின்பு, அதைக் குறுகிய வட்டத்திற்கு கொண்டு வந்து, வியாபார நிறுவனம் போல் ஆக்கிவிட்டார். அதிமுகவை டெண்டர் பார்ட்டியாக்கி வியாபார ரீதியாக நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி எனவும் தெரிவித்தார். 2024 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை திமுக வெற்றிக்கு பழனிச்சாமி உதவி செய்தார் எனவும் திமுக வின் பி டீம்மாக பழனிச்சாமி செயல்பட்டு வருகிற எனவும் குற்றம் சாட்டினர் .2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு மூடு விழா காண  எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். திமுகவிற்கு உதவி செய்வதை தியாகம் என எடப்பாடி பழனிச்சாமி நினைத்துக் கொண்டிருக்கிறார் எனவும், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு மூடு விழா கண்டு விடுவார் எனவும் தெரிவித்தார்.


கோடநாடு கொலை,கொள்ளை யாருக்காக நடந்ததோ, அவர்கள் ஆட்சி பொறுப்பில்  இருந்த போது சாட்சிகளை அழித்து தப்பித்து விட்டனர். கோட நாடு வழக்கில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டணை பெறுவார்கள் எனவும் தெரிவித்தார். பாமக தலைவர் ராமதாஸின் அறிக்கைக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் சொன்ன விதம் வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி எப்படி எல்லாம் பேசிக் கொண்டிருந்தாரோ, அதேபாணியில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினும் இப்போது பேசி வருகின்றார் எனவும், 2026 தேர்தலில் எப்படியும் வெற்றி பெற முடியாது என்பதால் இப்படி பேசுகிறார் என தெரிவித்தார்.
தேஜகூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துதான் வரும் தேர்தலை சந்திப்போம் எனவும், தமிழகத்தில் அப்படி அறிவித்து செய்தால்தான் சரியாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.


மேலும் படிக்க | திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ