Tamilaga Vettri Kazhagam | தவெக மாநாடுக்கு கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியதால், மாநாட்டை முன்கூட்டியே முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இரவு 7 மணிக்கு தவெக கொடியை ஏற்ற நடிகர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக காவல்துறை முக்கிய அறிவுத்தல்களை விஜய் மற்றும் தவெக தலைமை நிர்வாகிகளுக்கு கொடுத்திருக்கிறது. அதனால், பரபரப்பாக மேடைக்கு வந்த நடிகர் விஜய் அவசர அவசரமாக கட்சியை கொடியேற்றிவிட்டு, கொள்கை பாடலையும் வெளியிட்டார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக காவல்துறை வடக்கு மண்ட ஐஜி அஸ்ரா கார்க் அந்த அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தவெக மாநாடு


நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி விசாலையில் நடைபெற்றது. மாநாட்டுக்காக 80 ஏக்கர் பரப்பளவில் மாநாடு திடல் அமைக்கப்பட்டது. எல்லோரும் அமரும் வகையில் சுமார் 1 லட்சம் நாற்காலிகள் அமைக்கப்பட்டதுடன், மொபைல் டாய்லெட் வசதியும், கார் பார்க்கிங் வசதியும் முன்கூட்டியே செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைப்போலவே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தமிழ்நாடு முழுவதும் இருந்து நடிகர் விஜய் ரசிகர்கள் ஒன்று சேர விசாலையில் திரண்டனர்.


மேலும் படிக்க | தவெக மாநாட்டு திடலை சுற்றி சிகரெட் பீடி விற்பனை ஜோர், மது பாட்டிலோடு கும்மாளம்


போக்குவரத்து நெரிசல்


இதனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள்சாலையின் இருபுறங்களிலும் அணி வகுத்து நின்றது. காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை. வாகனங்கள் வந்த வண்ணம் இருந்ததால் சென்னை செல்லக்கூடிய வாகனங்கள் எல்லாம் சாலையிலேயே பல மணி நேரம் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அது மட்டும்மல்லாமல் வெயில் காரணமாக தவெக தொண்டர்கள் மயக்கமடைந்தனர். அவசர சிகிச்சைக்காக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவ சேவைக்கு மருத்துவமனைக்கு செல்வதில் பெரும் சிரமம் இருந்தது. 


காவல்துறை எடுத்த அதிரடி முடிவு


இதனையெல்லாம் கருத்தில் கொண்ட காவல்துறை விஜய் கட்சியின் தவெக மாநாட்டை முன்கூட்டியே முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மாநாட்டிற்கு வந்த அத்தனைபேரும் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்பதால் மாலை நேரத்தில் இன்னும் கூடுதல் போக்குவரத்து நெரிசல் மற்றும் இன்ன பிற சிக்கல்களும் எழ வாய்ப்பிருப்பதை தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எடுத்துக்கூறியுள்ளார். 7 மணிக்குள் மாநாட்டை முடித்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார். இதனால் தவெக மாநாடு முன்கூட்டியே தொடங்கியது. அவசர அவசரமாக மேடைக்கு வந்த விஜய், கட்சியின் கொள்கை பாடல் மற்றும் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.


மேலும் படிக்க | 2005இல் விஜயகாந்த் செய்த பெரிய சம்பவம்... தேமுதிகவை மிஞ்சுமா விஜய்யின் தவெக மாநாடு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ