விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுதிய எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனால் இந்த விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர். முன்னதாக இந்த விழாவில் திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை என்று அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். விகடன் பிரசுரம் இந்த நூலை வெளியிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டாஸ்மாக் தொடர்பாக புதிய திட்டம்! இனி அரசே 10 ரூபாய் கொடுக்கும்!


இந்த நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "திருமாவளவன் வரவில்லை என்றாலும் அவரது மனசாட்சி இங்கு தான் இருக்கும் என்று நம்புகிறேன். சில அரசியல் காரணங்களால் அவர் வரவில்லை. தமிழகத்தில் எப்போதும் மன்னர் ஆட்சி இருக்காது, இனியும் வராது. தமிழகத்தை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார கூடாது. ஜாதியின் அடிப்படையில் உருவாகும் தேர்தல் அரசியலை மாற்ற வேண்டும். தீண்டாமையை ஒழிப்பது முக்கியம் இல்லை, ஜாதியை ஒழிக்க வேண்டும். விஜய் அவர்கள் வேங்கை வயலுக்கு செல்ல வேண்டும். அங்கு நடந்த அவலத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.


இந்த நிகழ்வில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மத்தியில் நானும் இருப்பது பெருமையாக இருக்கிறது. நீ ஏன் பள்ளிக்கு வருகிறாய் ஒரு சமூகமே அவரை தடுத்தது. அதையும் மீறி அம்பேத்கர் பள்ளிக்கூடம் சென்றார். பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் அரசியல் சாசன சட்டத்தை கொடுத்தவர் அம்பேத்கர். தேர்தல் நியாகமான நடத்தப்பட வேண்டும், அதற்கு தேர்தல் ஆணையர் சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். 


அம்பேத்கர் பிறந்தநாளை ஜனநாயக உரிமைகள் பிறந்த தினம் என்று ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூரில் நடந்ததை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. வேங்கைவயல் ஊரில் நடந்ததை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை, ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. சமூக நீதி பேசும் அரசு இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறது. இதனை அமோதாக்ர் பார்த்தால் தலை குனிந்து போவார். பெண் குழந்தைக்கும், சக மனிதருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை. அனைவருக்கு எதிராகவும் குற்றம் நடக்கிறது. மக்களை உண்மையாக நேசிக்கும் நல்ல ஒரு அரசு வேண்டும்.


சம்பர்தாயத்திற்காக அறிக்கை விடுவதில், மழையில் புகைப்படம் எடுத்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சம்பர்தாயத்திற்காக சிலவற்றை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. தமிழக மக்களின் உரிமைகுக்காக எப்போது துணையாக இருப்பேன். மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசு, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி உள்ளது. இருமாப்போடு 200 தொகுதியிலும் வென்று விடலாம் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கைவிடுகிறேன். உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட திருமாவளவன் பங்கேற்க முடியாத அளவிற்கு கூட்டணி அழுத்தங்கள் இருந்தாலும், இனி திருமாவின் மனது எப்போதுமே நம்மிடம் இருக்கும்" என்று பேசினார்.


மேலும் படிக்க | இந்த பகுதிகளில் விரைவில் தடுப்பணைகள் கட்டப்படும்! அமைச்சர் துரைமுருகன் உறுதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ