TVK Vijay Governor Meeting Latest Updates: தமிழக வெற்றிக் கழகத்தின் தலவைரும், நடிகருமான விஜய், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை (Governor RN Ravi) சந்தித்தார். இன்று மதியம் 1 மணியளவில் நடந்த இந்த சந்திப்பில், தவெக தலைவர் விஜய் ஆளுநரிடம் 3 பக்க கோரிக்கைகளை அளித்துள்ளதாக கூறப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆளுநர் மாளிகைக்கு வெளியே விஜய் (TVK President Vijay) பேட்டியளிப்பார் என செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில், அங்கிருந்து புறப்படும்போது நுழைவுவாயிலில் காரைவிட்டு இறங்கி செய்தியாளர்களை நோக்கி கைக்காட்டிவிட்டு சென்றுவிட்டார். நடிகர் விஜய் மீண்டும் ஒருமுறை பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றிருப்பது அரசியல் களத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


விஜய் ஆளுநரிடம் வைத்த 3 கோரிக்கைகள்


இது ஒருபுறம் இருக்க, ஆளுநரிடம் தவெக தலைவர் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கையும் வெளியானது. ஆளுநர் சந்திப்பு குறித்து தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில்,"இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.



மேலும் படிக்க | இந்த காரணத்திற்காக தான் பொங்கல் பரிசில் ரூ. 1000 இல்லை! அமைச்சர் கொடுத்த விளக்கம்!


மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


விஜய் கொடுத்த பரிசு...?


ஆளுநருக்கு நடிகர் விஜய் திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். தொடர்ந்து, நடிகர் விஜய்க்கு ஆளுநர் பாரதியார் புத்தகங்களை பரிசாக அளித்தார். நடிகர் விஜய்யுடன் ஆளுநரை சந்திக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோரும் உடன் வந்தனர். நடிகர் விஜய் ஊதா மற்றும் வெள்ளை நிறத்திலான 'TN14 AK 6791' என்ற பதிவெண் கொண்ட மாருதி சுசூகி சுவிப்ட் காரில் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார். 


விஜய்க்கு அண்ணாமலை வரவேற்பு


இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநரைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


விஜய் ஆளுநரை சந்தித்தது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும் தமிழ்நாடு பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 



மேலும் படிக்க | மாணவி பாலியல் வன்கொடுமை : தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை!


எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்


அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமை விவாகரத்தில் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்த விஜய், இன்று அதுகுறித்து கடிதம் ஒன்றை தனது கையப்பட எழுதி வெளியிட்டார். விஜய் எழுதிய அந்த கடிதத்தில் தங்கைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரிதும் வேதனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 


யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது என்றும் நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்தது அதற்காகவே இக்கடிதம் என்றும் அதில் குறிபிட்டுள்ளார். எல்லா சூழ்நிலையிலும் நிச்சயமாக உங்களுடன் தான் அண்ணனாகவும், அரணாகவும் உறுதியாக நிற்பேன் எனவும் அதில் தெரிவித்திருந்தார். அந்த வகையில், அதிமுக, பாஜகவை போல இந்த விவகாரத்தில் தவெகவும் தனி நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதிமுக மாநிலம் முழுவதும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. பாஜக மாநில தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக இருப்பதாக கூறி தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். அந்த வரிசையில் விஜய் தற்போது ஆளுநரை சந்தித்துள்ளார். 


விஜய் பேச்சில் முரண்...?


கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டி சாலையில் நடைபெற்ற தவெக முதல் மாநில மாநாட்டில் ஆளுநர் பதவியே தேவையில்லை என முழக்கமிட்ட விஜய், தற்போது ஆளுநரிடம் வந்து கோரிக்கை மனு வைப்பது முரணாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திமுகவும் இதுபோன்ற ஆளுநர் பதவியே தேவையில்லை என கடந்த காலங்களில் பலமுறை பேசியிருந்தாலும், அதிமுக ஆட்சி சார்ந்து குற்றஞ்சாட்ட பலமுறை ஆளுநரை திமுகவினர் சந்தித்திருப்பதையும் பலர் சுட்டிக்காட்டி பதிலளித்து வருகின்றனர். 


இருப்பினும், அதிமுகவை போல் களத்தில் இறங்கி மக்களிடம் இந்த பிரச்னையை கொண்டுசெல்லாமல் வெறும் ஆட்சியாளர்களை சந்தித்து மனு அளிப்பதும், X தளத்தில் பதிவிடுவதும் சரியான அரசியலாக இருக்காது என்றும் சிலர் வாதிடுகின்றனர். விஜய் ஆளுநரை சந்தித்தது தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | ஈஷா கிராமோத்சவம்: 'இது காஷ்மீர் டூ குமரி வரை நடக்க வேண்டும்' - சத்குரு; புகாழாரம் சூட்டிய சேவாக்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ