இரட்டை இலை லஞ்சம் வழக்கு: டிச.,5க்கும் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு!
சென்னை ஆர்கேநகர் இடைத் தேர்தலின் போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் தரப்பு பேரம் பேசியதாக வழக்கு போடப்பட்டது.
இதற்காக சுகேஷிடம் ரூ. 1.5 கோடி முன்பணம் தரப்பட்டதாகவும் சுகேஷை டெல்லி லாட்ஜில் கைது செய்த போலீசார் தெரிவித்தனர். சுகேஷ் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தினகனும் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது டிசம்பர் 5-ம் தேதிக்குள் துணை குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் சுகேஷ் சந்திரசேகரின் காவலை வருகிற 23-ம் தேதி வரை நீட்டித்தும் கோர்ட்டு உத்தரவிட்டது.