திமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது
திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன் மற்றும் கார் ஓட்டுநர் தனசீலன் ஆகிய இருவர் கைது.
சென்னை: திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 2 பேர் கைது. சமயபுரம் டோல்கேட் அருகில் வைத்து சமயபுரம் போலீசார் உதவியோடு கைது செய்து மடிப்பாக்கம் காவல்துறையினர் நடவடிக்கை. கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன் மற்றும் கார் ஓட்டுநர் தனசீலன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக சார்பில் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
வழக்குகள் விவரம்:
திசையன்விளையில் காவல் நிலையத்தில் சந்தோஷ் ராஜ் என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கு
வேளச்சேரி காவல்நிலையத்தில் வாடகை கடை நடத்தி வந்த வியாபாரியை காலி செய்யச் சொல்லி மிரட்டிய வழக்கு
ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் ரோட்டில் திமுக பிரமுகர் ராஜேஷ் மீது வெடிகுண்டு வீசி தாக்க முயன்ற வழக்கு
ஆறுமுகநேரி திமுக அலுவலகத்தை தீ வைத்து எரித்த வழக்கு
ALSO READ | Crime: திமுக வட்ட செயலாளர் செல்வம் படுகொலை
திமுக பிரமுகர் கொலை:
கொலை செய்யப்பட்ட செல்வம், மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் சார்பில் 188வது வட்டத்தில் வேட்பாளராக போட்டியிட இருந்தார். இந்நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தொழிலில் ஏற்பட்ட விரோதத்தினால் இந்தக் கொலை நடைபெற்றதாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து தற்போது திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 2 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
ALSO READ | "உல்லாச விருந்து" மயங்கிய அரசியல் தலைவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR