Crime: திமுக வட்ட செயலாளர் செல்வம் படுகொலை

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி கொலை.

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Feb 2, 2022, 06:58 AM IST
Crime: திமுக வட்ட செயலாளர் செல்வம் படுகொலை title=

சென்னை: சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி கொலை.

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தொழிலில் ஏற்பட்ட விரோதத்தினால் இந்தக் கொலை நடைபெற்றதாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட செல்வம், மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். எதிர்வரும்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  திமுகவின் சார்பில் 188வது வட்டத்தில் வேட்பாளராக போட்டியிட இருந்தவர் செல்வம் என்பது குறிபிடத்தக்கது. 

dmk
செல்வத்தின் வீட்டின் அருகே கும்பலாக வந்தவர்கள், அவருக்கு சால்வை அணிவிப்பது போல் நடித்து, செல்வத்தை நெருங்கி, வெட்டியதாக தெரியவந்துள்ளது. 

8 பேர் கொண்ட கும்பல் செய்த கொலையால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற உள்ள நபர் கொலை செய்யப்பட்ட விவகாரம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

தற்போது செல்வத்தின் மனைவி சமீனா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்ட செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 

ALSO READ | போதையில் ரகளை செய்த மகன்; தீவைத்து எரித்த பெற்றோர்- வெளியான சிசிடிவி காட்சி

அண்மையில், சில தினங்களுக்கு முன்னதாக, நெல்லை பாளையங்கோட்டையில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு வட்டச்செயலாளர் கொல்லப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் ஆளும் கட்சி நிர்வாகியே படுகொலை செய்யப்பட்டிருப்பது, நகரில் பாதுகாப்பற்ற நிலைமையை வெளிப்படையாக காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.  

ALSO READ  | போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை - கணவனை கொன்ற மனைவி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News