முழு அடைப்பின் போது பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்த 50 மதுபான பாட்டில்களை திருடியதாக சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நாடு முழுவதும் முழு அடைப்பு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் TASMAC கடைகள் செயல்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி கிராமங்கள் உள்பட நகரத்தில் சில பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன. கள்ளத்தனமாக விற்கப்படும் இந்த பாட்டில்கள் விலை இரட்டிப்பாக இருக்கும் நிலையில், சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களில் இருந்து 50 பாட்டில்களை திருடியதாக தெரிகிறது.


தகவல்கள் படி காவலர்கள் பாட்டில்கள் வைத்திருந்த பெட்டியைத் திறந்து 50 பாட்டில்களை தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.


இந்த சம்பவம் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைப்பெற்றதாவும், மறுநாள் நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு பெட்டி உடைந்து பாட்டில்கள் காணாமல் போனதைக் கண்டறிந்தனர் எனவும் தெரிகிறது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


பாதுகாப்பு பெட்டியைத் திறந்து மதுபானத்தைத் திருட பழக்கமான குற்றவாளியின் உதவியை காவலர்கள் பயன்படுத்தியதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


“அவர்கள் அதை தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துத்துள்ளனர், வெளியில் விற்பதற்காக இல்லை. இதற்கு அவர்கள் ஒரு குற்றவாளியின் உதவியையும் நாடியுள்ளனர். திருடப்பட்ட பாட்டில்களில் ஒரு பகுதியினை அவர்கள் திருடனுடன் பகிர்ந்துள்ளனர்" என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.


இந்த சம்பவத்தை அடுத்து இரண்டு காவலர்களும் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டனர் மற்றும் பின்தொடர்தல் துறை நடவடிக்கையாக திங்களன்று இடைநீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் அதிகாரி தெரிவிக்கின்றார்.