தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என அண்மையில் பேசியது இந்திய அளவில் வலதுசாரி அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்து மதத்துக்கு எதிராக அவர் பேசிவிட்டதாகவும், இந்து மதத்தை ஒழிக்கவும், இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தாகவும் வட மாநிலங்களில் பல்வேறு வகைகளில் எல்லாம் திரித்து பரப்பப்பட்டது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேரடியாக விமர்சிக்க, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் உதயநிதிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியாகவும் தகவல் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திமுக முக்கிய புள்ளிகளை தூக்க எடப்பாடி கொடுத்திருக்கும் அசைன்மென்ட் - செல்லூர் ராஜூ ஓபன்டாக்


ஆனால், இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருபோதும் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதுடன் சனாதனம் குறித்து தொடர்ச்சியாக பேசுவேன் என்றும், அதில் இருக்கும் சாதி பாகுபாடுகளை விமர்சிக்க தயங்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். ஒரு சிலர் தங்கள் ஆதாயத்துக்காக தான் பேசியதை திரித்து பரப்பவுதாகவும், அவர்களுக்கு இதைதவிர வேறு எதுவும் தெரியாது என்றும் கூறினார். இன்று காலை திமுக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசுபோதும் கூட சனாதனத்தை ஒழிப்போம் என பேசினார். அதன்பிறகு டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை போட்டிருக்கும் அவர், ஊழலை வேரோடு ஒழிப்பும் என ஆட்சிக்கு வந்த பாசிஸ்டுகள் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.


அதனை மறைக்க மொழி - மதம் என கலவரத்தின் னிப் ஒளிந்து கொள்ளும் பாஜகவை மக்களின் கோபமும் இந்தியா கூட்டணியின் வலிமையும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மூழ்க்கடிக்கப்போவது உறுதி என தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மீது எழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் அந்த பதிவில் பட்டியலிட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவில், " ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர்.



ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது.  இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் - I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி." என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற பெண்! சிறிது நேரத்தில் தானும் உயிரிழந்த சோகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ