உதயநிதி ஸ்டாலின் பேச்சு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனாதனத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பேசினார். டெங்கு, மலேரியா, கொரோனாவுக்கு ஒப்பானது என்பதால் அவற்றை எதிர்க்கவெல்லாம் கூடாது, அறவே ஒழித்துவிட வேண்டும் என தெரிவித்தார். சனாதனம் என்பது மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


பாஜ கடும் எதிர்ப்பு


அவரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக மட்டுமல்லாமல், அக்கட்சியின் டெல்லி தலைமையே நேரடியாக ரியாக்ட் செய்துள்ளது. அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் பேசும்போது, சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என இந்துக்களுக்கு எதிராக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதனால் இந்துக்களின் மனம் புண்பட்டிருக்கிறது, அவர்களின் கரம் கோர்த்து இருக்கும் காங்கிரஸின் நிலைப்பாடு இதில் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.


மேலும் படிக்க | அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் - ஜெயக்குமார் விளாசல்


சாமியாரின் சர்ச்சைப் பேச்சு


இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு கவனம் பெற்று வலதுசாரி அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதில் உட்சபட்சமாக அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரகாம்ச ஆச்சாரியா, உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை கத்தியால் கிழித்ததுடன், அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தார்.


உதயநிதி ஸ்டாலின் கிண்டல்


சாமியாரின் இந்த ரியாக்ஷனை பார்த்து கிண்டலடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் தலையை சீவுவதற்கு எதற்கு 10 கோடி ரூபாய், 10 ரூபாய் சீப்பு இருந்தால் நானே சீவிக் கொள்வேனே என நக்கலாக கூறினார். மேலும், 10 கோடி ரூபாய் உனக்கு எப்படி வந்தது? நீ சாமியாரா? இல்லை காவிக்குள் ஒளிந்திருக்கும் ரவுடியா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என பதிலளித்தார். 


சாமியாரின் ரியாக்ஷன்



இதனை கேள்விப்பட்ட சாமியார் பரகாம்ச ஆச்சாரியா இன்னும் கடுப்பாகிவிட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் இன்னும் கூடுதல் விலை கூட அறிவிக்க தயார் என தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு இடங்களில் அந்த சாமியாரின் உருவ பொம்மையை திமுகவினர் கொளுத்தி வருகின்றனர். ஒரு மாநில அமைச்சருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் ஒரு சாமியார் மீது உத்தரப்பிரதேச அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அம்மாநில அரசின் சட்டம் ஒழுங்கு நிலையை வெட்ட வெளிச்சமாக்குவதாக அரசியல் வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   


மேலும் படிக்க | ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ