மதுரை மாவட்டம் மேலூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,500 மூத்த திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார். இந்த விழாவில் விழாவில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உதயநிதி ஸ்டாலின் பேச்சு…


விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் ஆடல், பாடல் உள்ளிட்ட கட்சி நடைபெற்றது. ஒரு மாநாடு எப்படி நடத்த கூடாது என்பதற்கு அதிமுக மாநாடு உதாரணம். ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு திமுக இளைஞரணி மாநாடு முன்னுதாரணமாக அமைய உள்ளது” என்று கூறினார். மேலும், “நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் எனும் ரகசியத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுவாரா?” என்று கேள்வி எழுப்பினார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் திமுகவின் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கையெழுத்து போடுவாரா என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார். 


மேலும் படிக்க | பாஜகவை விமர்சிக்க வேண்டாம், கூட்டணி பற்றி பேச வேண்டாம்: அதிமுக தலைமை அதிரடி உத்தரவு


சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: 


தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் சனாதனம் குறித்து பேசிய கருத்து திரித்து வெளியிட்டப்பட்டு உள்ளது. தற்போது சாமியார்கள் எனது தலைக்கு 10 கோடி, 50 கோடி என விலை வைக்கின்றனர். நான் கலைஞர் வழியில் இருந்து வந்தவன். திமுககாரன் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்” என்றும் கூறினார்.  சனாதானத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம் தான் திமுக. சனாதனத்தை ஒழிக்கும் வரை நாம் போராட வேண்டும்” என்று கூறினார். 


மேலும், “புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், தாழ்த்தப்பட்ட சமுதாயம் மற்றும் விதவை என்பதால்  குடியரசு தலைவர் திரௌபதி மூர்மூவை அவர்கள்  அழைக்கவில்லை. இதுதான் சனாதானம் இதைத்தான் நாம் ஒழிக்க வேண்டும்.  2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவினர் கடுமையான உழைக்க வேண்டும்” என்று கூறினார்.


“மோடி என்ன கிழிச்சாரு..?”


மோடி குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி எங்கே சென்றாலும் என்னை பற்றியும், முதல்வர் குறித்தும் பேசி வருகிறார். மோடி ஒன்பதரை ஆண்டுகளில் என்னத்தை கிழித்து உள்ளார் என தெரியவில்லை. சாலை, காப்பீடு என அனைத்திலும் பாஜக அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது” என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், “பாஜக அரசால் வாழும் ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டுமே. அதானிக்காக பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற திமுகவினர் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து பாஜக எனும் பாம்பை  ஒழிக்க வேண்டும் என்றால், அதிமுக எனும் குப்பையை அகற்ற வேண்டும்” என்று கூறினார். 


மேலும் படிக்க | “எதுக்கு புரியாம பேசுற?” கடுப்பான கனிமொழி-நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ