மதுரை மக்கள் செங்கல்லை எடுக்க போறாங்க! கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!
மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை வேலையை ஒன்றிய அரசு ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப்பந்து கால்பந்து போட்டிகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் விளையாட்டு போட்டிகள் போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை நாணயம் சுண்டி விட்டு தொடங்கி வைத்தார். மேலும் ஒருவர் பந்து வீச உதயநிதி ஸ்டாலின் மட்டையை சுழற்றி கிரிக்கெட் பந்தை அடித்து கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க | 'யோக்கியன் வர்றார் சொம்பு எடுத்து வை' - எடப்பாடியை விளாசிய தங்கம் தென்னரசு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆண்டுதோறும் கிரிக்கெட், கால்பந்து, இறகுப்பந்து போட்டிகளில் அரசு அதிகாரிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ் கலந்து கொள்ளும் முதல் போட்டியை துவக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 1 1/2 மாதங்களாக விளையாட்டு அரங்குகளுக்கு சென்று நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு வருகிறேன். அதிகாரிகளுடன் கலந்து பேசி முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நல்ல அறிவிப்புகள் வரும் என்றார். மேலும் ஒடிசா மாநிலத்திற்கு சென்று விளையாட்டு மைதானங்களை பார்வையிட்டு முதல்வரிடம் கூறியுள்ளோம். இங்கும் நல்ல கட்டமைப்பு உள்ளது.
விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் அறிவிப்புகள் அறிவிக்கப்படும். தேர்தலில் செங்கல்லை கையில் வைத்து சுற்றி வந்தேன் செங்கல்லை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள், ஒன்றிய அரசுக்கு வைக்கின்ற ஒரே கோரிக்கை மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு வேலையை ஆரம்பிக்க வேண்டும்" என்று கூறினார். மேலும் ஈரோடு தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ளது, வாக்கு வித்தியாசம் தான் எனக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ