Udhayanidhi Stalin Latest News Updates: திமுகவின் இளைஞரணி 45ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, இந்த நிகழ்வில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் வாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தி, தூத்துக்குடி இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மதியழகன் முன்மொழிந்து வேண்டுகோள் வைத்தார்.


'பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது'


தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"45 வருட தொடர்ச்சியில்  பொறுப்பில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் தலைவர் அவர்களுக்கு நன்றி. சேலம் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். திமுகவில் இளைஞர் அணி எப்போதும் முதன்மையாக இருக்கிறது. 


மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் கட்சி கொடி அடுத்த வாரம் அறிமுகம்


மோடி இத்தனை முறை வந்து, குறைந்தபட்சம் இரண்டாவது இடமாவது கிடைக்காதா என்று எதிர்பார்த்தார்கள். மோடி ஆறு முறை தமிழகம் வந்தும் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. மூன்று தொகுதியாவது கிடைக்கும் என்ற பாஜகவின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பாஜகவுக்கு பதிலடி கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி.
மக்களவை தேர்தல், விக்கிரவாண்டி தேர்தல் வெற்றிக்கு இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கு முக்கியமானதாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் பல நிகழ்வில் இருந்தாலும் இளைஞரணி நிகழ்வு என்றவுடன் அதற்கென வாழ்த்து தெரிவித்தார். கூட்டம் சிறப்பாக நடக்க வேண்டும் என நினைப்பவர்.


பெரிய பொறுப்பு வந்தாலும்...


முதலமைச்சருக்கு துணையாக வரவேண்டும் என தீர்மானம் எல்லாம் நிறைவேறியுள்ளது. பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகளை படித்துவிட்டு வந்து, ஒருவேளை இது நடக்கப்போகிறதோ என்ற அடிப்படையில் நாமும் ஒரு துண்டை போட்டுவைத்துக்கொள்வோம் என்ற ரீதியில் இங்கு பேசியிருக்கிறீர்கள். 


தலைவர் ஸ்டாலின் எந்த பொறுப்புக்கு போனாலும் தனது மனதுக்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் என பலமுறை கூறியிருக்கிறார். அதுபோல், துணை முதலமைச்சர் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம், அமைச்சர்களாகிய நாங்கள் அனைவரும் முதலமைச்சருக்கு துணையாகவே இருப்போம். இங்கு வந்திருக்கக் கூடிய அனைத்து அமைப்பாளர்களும் முதலமைச்சருக்கு துணையாகவே இருப்பார்கள். அந்த வகையில், எஎவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் எனக்கு மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான்" என இதுகுறித்த பேச்சுகளுக்கு பதிலளித்தார்.


மேலும் பேசிய அவர்,"2026ஆம் ஆண்டு திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். நிர்வாகிகள் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.


முடிவு முதல்வரிடம்...


கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், 'எந்த பொறுப்புக்கு சென்றாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என பேசினீர்கள், உங்களுக்கான பொறுப்புகள் மாறுகிறதா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. "பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்" என பதில் அளித்தார்.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை - ஜான் பாண்டியன் பேட்டி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ