அறிவிக்கப்படாத துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்?
சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் நாளை (டி.14)அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது, முதல் முறையாக முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்ததில் இருந்து பலவிதமான மக்கள் சேவைகளையும் செய்து வருகிறார் முக ஸ்டாலின். குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தது, மேலும் நிதி சுமையும் அதிகமாக இருந்து வந்தது. சமீபத்தில் மழை பாதிப்புகளிலும் திமுக அரசு நல்ல முன்னேற்பாடுகளை செய்ததாக பாராட்டுகளையும் பெற்றனர். திமுக குடும்ப அரசியல் செய்கிறது, கட்சியில் பல ஆண்டுகளாக உள்ளவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை போன்ற பலவிதமான விமர்சனங்களும் இருந்து வருகிறது. தேர்தலில் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏவும் ஆனார்.
மேலும் படிக்க | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
கடந்த ஆண்டு முதலே உதயநிதி ஸ்டாலின்க்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. ஆனாலும் அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேறுகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வந்துள்ளது. இதன் மூலம் மிகவும் கம்மி வயதில் அமைச்சராகும் வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதி 45வது வயதில் தமிழகத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றார். முதலமைச்சர் முக ஸ்டாலின் 45 வது வயதில் மேயராக பொறுப்பேற்றார், இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் 45 வது வயதில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
இன்னும் இந்த துறை தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத போதிலும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் போன்ற துறைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அனைத்து முக்கிய முடிவுகளையும் உதயநிதி ஸ்டாலின் தான் எடுக்க முடியும் என்ற நிலை உருவாக உள்ளது. ஆதலால் அறிவிக்கப்படாத துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் இருக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ஆகவும் உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். கட்சி ஆட்சி என இரண்டிலும் கூடுதல் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினிடம் வர உள்ளது. மு கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் அமைச்சராக பொறுப்பேற்பவர்கள் ஆட்சி முடியும் வரை மாற்றப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கவில்லை! ஏமாறவேண்டாம்: எச்சரிக்கும் அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ