உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபாடிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக இந்திய விளையாட்டு வீரர்களை அமைச்சூர் கபாடிக் குழு சார்பாக தேர்வு செய்யும் கபாடிப் போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரையில்  இந்த கபாடிப் போட்டி நடைபெறுவது பெரும் மகிழ்ச்சி. அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 252 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி ஈரானில் நடைபெறும் உலக கபாடிப் போட்டியில் விளையாட உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: முதலமைச்சர் அறிவிப்பு - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்



இந்தியா சார்பில்  30 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 நபர்கள் விளையாட செல்வார்கள். இதில் தமிழர் ஒருவரும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கி தமிழக நிதி அமைச்சர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அது பாராட்டுக்குறியது. அமைச்சூர் கபாடிக் குழுவிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அம்மாவின் அரசும், எடப்பாடியார் அரசும் பல்வேறு நிதிகளை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. 



அதே போல் இட ஒதுக்கீடுகளையும் கூடுதலாக வழங்கினர். தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க., அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது பாராட்டுக்குறிது. இதனால் விளையாட்டுத் துறைக்கு நிறைய செய்வார்கள். கூடுதலாக விளையாட்டு  ஸ்டேடியங்கள் இருக்க வேண்டும். இதற்காக சட்ட மன்றத்தில் குரல் கொடுப்பேன். செய்தியின் வாயிலாக விளையாட்டுத் துறை அமைச்சர் கவனத்திற்கு நீங்கள் கொண்டு செல்லுங்கள்" என செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


மேலும் படிக்க: நரிக்குறவர் இன மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறதா கல்வி...? -துயரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ