`எந்த கட்சியும் ஓட்டு கேட்டு வரக்கூடாது` உடுமலைப்பேட்டை மலை கிராம மக்கள் அறிவிப்பு
Udumalaipettai Kulipatti villagers Election boycott: உடுமலை அருகே ஒட்டுகேட்டு எந்த கட்சியினரும் வர வேண்டாம் என மலைகிராம மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். சாலை வசதியை இதுவரை யாரும் அமைத்து தராததால்ர அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் அமைந்துள்ளது குழிப்பட்டி மலை கிராமம். இங்கிருந்து அவசர தேவைக்கு மலையிலிருந்து கீழறிங்கி வர போதுமான சாலை வசதி இல்லை. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு இங்குள்ள மக்கள் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாகம்மால் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட சாலைவசதி இல்லாததால் அவரை தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். அதனை வீடியோவாக பதிவிட்ட மலைவாழ் மக்கள் சாலை வசதி இல்லாததால், இப்போது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எம்.எல்.ஏ நிதி, எம்.பி நிதி, ஆதிதிராவிடர் நிதி என எவ்வளவோ நிதி இருக்கும்போது எங்களுக்கு ஏன் சாலைவசதி செய்து கொடுக்கவில்லை என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க - கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கமிஷன் அடிக்க முடியும் - பாஜக அண்ணாமலை!
எனவே, நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எந்த கட்சியும் ஒட்டுகேட்டு மலைவாழ் மக்கள் பகுதிக்கு வரவேண்டாம் என ஆவேசமாக கூறியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, குழிப்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி செய்து தராத தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், " திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் மூலம், பல ஆயிரம் கோடி நிதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டும், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று.
மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், அந்தத் திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்" என கேட்டுள்ளார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை! சென்னையில் போக்குவரத்து அதிரடி மாற்றம் - தெரிஞ்சுக்கோங்க மக்களே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ