மதுரை நகரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட உள்ளது. இதற்காக மதுரையில் ரூ.344.76 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் பணிகளைத் தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 157 கோடியே 70 லட்சம் மதிப்பில் பெரியார் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. வணிக வளாகத்துடன் கூடிய பேருந்துநிலையமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 64 பேருந்துகள் நிற்கும் வசதி, 429 கடைகள், பயணிகள் காத்திருப்பு பகுதி, லிப்ட், நகரும் படிக்கட்டுகள் என முழுவதும் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.


இந்நிலையில் நவீன நகரங்கள் திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவதற்கான பணிகளை துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.