யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் பாரம்பரிய இசை பங்களிப்புக்காக சென்னை இடம் பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுனெஸ்கோ அமைப்பின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் பாரம்பரிய இசை பங்களிப்புக்காக சென்னை இடம் பெற்றது. யுனெஸ்கோ  அமைப்பானது கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு கொடுக்கும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் என்ற அங்கீகாரம் வழங்கி வருகிறது. 


இந்த ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு சென்னையை பாரம்பரிய இசைப் பிரிவில் சேர்த்து கிரியேட்டிவ் சிட்டீஸ் என்ற அங்கீகாரம் வழங்கியது. இதற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். 


தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:-


பாரம்பரிய இசைப் பங்களிப்புக்காக சென்னை யுனெஸ்கோ அமைப்பின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் இடம் பெற்றது பெருமையான விசியம். பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. சென்னை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.