கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ₹98.05 லட்சம் மதிப்பிலான நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவையில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ₹98.05 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. 



கேரள மாநிலம் திருச்சூரை மையாமாக கொண்டு இயங்கி வரும் கல்யாண் ஜூவல்லர்ஸ் தமிழகம் மற்றும் கேரளாவில் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.


இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து கோவை கிளைக்கு ₹98.05 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் (3107 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி) காரின் மூலம் கொண்டுவரப் பட்டுள்ளது.  நகைகளை திருச்சூரைச் சேர்ந்த ஊழியர்களான ஓட்டுநர் அர்ஜுன், மற்றும் வில்ஃப்ரெட் ஆகியோர் கொண்டு வந்துள்ளனர்.


தமிழக - கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடியில் அவர்களது கார் கடந்து வந்த போது, அவர்களது காரை முன்னும் பின்னுமாக இரண்டு கார்களில் வழிமறிந்த மர்ம நபர்கள், ஊழியர்கள் இருவரையும் காரில் இருந்து இழுத்து கீழே தள்ளிவிட்டு காருடன் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நகைகடை ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


காரை மறித்து நகையைத் திருடும் CCTV காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.