சென்னை: தமிழ்நாட்டில் 38 புதிய கோவிட் -19 தொற்று பதிவு செய்துள்ள நிலையில், மாநிலத்தில் 22 மாவட்டங்களை கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களாக (Hotspots) மத்திய அரசு அறிவித்தது. புதன்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1,242 ஆக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், திண்டிக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவாரூர், திருவள்ளுவர், சேலம் மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களை மத்திய அரசு வெளியிட்ட ஹாட்ஸ்பாட் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. 


தமிழகத்தில் சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி 214 பேர் பாதிப்பு, கோயம்புத்தூரில் 126 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.


ஊடகங்களுடன் பேசிய சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் (C Vijayabaskar), தமிழ்நாட்டில் இன்னும் "சமூக விலகல்" இல்லை, மக்கள் சமூக தூரத்தை கடைபிடிக்க என்று மீண்டும் வலியுறுத்தினார். "இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் மற்றும் SARI (கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள்) பாதிப்பு உள்ளவர்களையும் நாங்கள் சோதித்து வருகிறோம். அவர்களுக்கு எதிர்மறையான சோதனை வந்துள்ளது.  மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றார்.


இன்று உறுதிப்படுத்தப்பட்ட 38 பேரில் 34 பேருக்கு நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள நான்கு நோயாளிகளில், மூன்று பேருக்கு தொடர்பு வரலாறு உள்ளது. அதில் ஒருவர் மருத்துவர் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் புதன்கிழமை முப்பத்தேழு பேர் மீட்கப்பட்டனர். இதனால் மொத்தம் மீட்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.


மாநிலத்தில் இரண்டு புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 வயது நபர் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 59 வயதான நபரும் இறந்தனர்.


மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய மருத்துவ அறிக்கையின்படி, 17,835 நபர்களின் 21,994 மாதிரிகள் புதன்கிழமை வரை பரிசோதிக்கப்பட்டுள்ளன.


சுகாதார அமைச்சர் தமிழ்நாட்டின் ஆய்வகங்களில் சோதனை திறன் குறித்த விவரங்களையும் வழங்கினார். COVID-19 க்கான மாதிரிகளை சோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ள 26 ஆய்வகங்கள் உள்ளன. அதில் அரசுக்கு 16 அரசு மற்றும் 10 தனியாரிடமும் உள்ளது.


"ஒரு நாளில், தமிழக அரசு ஆய்வகங்கள் தலா ஒரு ஆய்வகம் என 270 மாதிரிகளை சோதிக்க முடியும். மேலும் தனியார் ஆய்வகங்கள் தமிழ்நாட்டில் தலா 100 மாதிரிகளை சோதிக்கும் திறன் கொண்டவை. மொத்தத்தில் 5320 மாதிரிகள் ஒரு நாளில் சோதிக்கப்படலாம். இவை ஆர்டி பி.சி.ஆர் (RT PCR) சோதனைகள" என்றார்.


தமிழகத்தில் ஏற்கனவே 1 லட்சம் ஆர்டி பி.சி.ஆர் (RT PCR) டெஸ்ட் கிட்கள் இருப்பதாகவும், 20000 கிட்கள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இவை தவிர, டாடா குழுமம் 40000 கிட்களை மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் போதுமான சோதனை கருவிகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றார்.