மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்கள் அவை வேட்பாளராக அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ள மாநிலங்கள் அவை தொகுதிக்கு பிஜேபியே போட்டியிடுதாக, பிஜேபி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் ஆதரவு கேட்டு முதல்வர் ரங்கசாமியிடம் பிஜேபி கோரிக்கை வைத்திருந்த நிலையில், எல்.முருகன் புதுச்சேரியில் இருந்து போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவராக எல். முருகன், தேர்தலின் போது சிறப்பாக செயல்பட்டு, பாஜகவிற்கு நான்கு எம் எல் ஏக்கள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவக்கம் நடைபெற்ற போது, அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
எனினும், திரு.எல்.முருகன் (L.Murugan), நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படாத நிலையில், அவர் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜக (BJP)சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பிராதேசத்தில், பாஜகவிற்கு போதுமான பலம் இருப்படால், எல்.முருகம் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என கூறப்படுகிறது.
ALSO READ | உலகின் தொன்மையான நாகரீகம் கொண்ட தமிழகத்தின் ஆளுநராக பதவிற்றதில் மகிழ்ச்சி: RN.Ravi
முன்னதாக, புதுச்சேரியில் உள்ள மாநிலங்கள் அவை தொகுதிக்கு பிஜேபியே போட்டியிடுதாக, பிஜேபி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் ஆதரவு கேட்டு முதல்வர் ரங்கசாமியிடம் பிஜேபி கோரிக்கை வைத்திருந்த நிலையில், எல்.முருகன் புதுச்சேரியில் இருந்து போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக, தமிழகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ,மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் இறந்த காரணத்தினாலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர், கடந்த மே மாதம் மாநிலங்களவை உறுப்பினர் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், தற்போது தமிழ்நாட்டில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவக்கத்தில், எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து, கே.அண்ணாமலை (K.Annamalai) அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR