உலகின் தொன்மையான நாகரீகம் கொண்ட தமிழகத்தின் ஆளுநராக பதவிற்றதில் மகிழ்ச்சி: RN.Ravi

ஆர்.என்.ரவி கடந்த 1976ம் ஆண்டு கேரள பிரிவு IPS அதிகாரியாக பணியாற்றியுள்ள நிலையில் , உளவு பிரிவின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 

Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2021, 11:32 AM IST
உலகின் தொன்மையான நாகரீகம் கொண்ட தமிழகத்தின் ஆளுநராக பதவிற்றதில் மகிழ்ச்சி: RN.Ravi title=

தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆன் என் ரவி பதவியேற்றுக்கொண்டார், சென்னை கிண்டி ராஜ்பவனில் நடந்த பதவி ஏற்பு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , எதிர்க்கட்சி tஹலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மாநில அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக  பதவியேற்றுக்கொண்ட ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புத்தகங்களை பரிசளித்து வாழ்த்து கூறினார்.

ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  பதவி ஏற்ற பிறகு அளித்த பேட்டியில், உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக புதிய ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டி அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு  தமிழகத்தில் சேவை ஆற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்

ALSO READ: தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்

முன்னதாக, தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். ஆர்.என்.ரவி கடந்த 1976ம் ஆண்டு கேரள பிரிவு IPS அதிகாரியாக பணியாற்றியுள்ள நிலையில் , உளவு பிரிவின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் நாகலாந்து மாநில ஆளுநராக இவர் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுரகா நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News