அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசுமுறை பயணமாக அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ள நிலையில் தற்போது துணை முதல்வரும் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது.


முதல்வரின் பயணத்தின் போது, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்த கொண்ட அவர் 55 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்து வந்தார். அவருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலக அதிகாரிகளும் சென்றிருந்தனர்.



இந்நிலையில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வார் எனவும், இந்த சுற்றுப்பயணம் 10 நாட்களுக்கு நீடிக்கும் எனவும்,  இந்த சுற்றுப்பயணத்திற்கு பின்னர் தமிழகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தில் பெரும் மாற்றம் நிகழும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்க, பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர்! 


மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அவர்களும் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ மாநகரை அடைந்த தமிழக துணை முதல்வருக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.


முன்னதாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.