சென்னை: ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சி கூடங்களை (Gyms) மீண்டும் திறக்க அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு புதன்கிழமை (ஆகஸ்ட் 5, 2020) வெளியிட்டது. இருப்பினும், மாநில அரசு சில நிபந்தனைகளை விதித்து, 50 மற்றும் அதற்கு குறைவான வயதுடைய பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடற்பயிற்சி கூடங்களின் செயல்பாட்டிற்கான எஸ்ஓபி (SOP) வரும் நாட்களில் பகிரப்படும் என்று மாநில அரசு (TN Govt)  தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்த அன்லாக் 3-க்கான (Unlock 3) வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த உத்தரவு வந்துள்ளது.


ALSO READ |  புதன்கிழமை முதல் Gyms, Yoga மையங்கள் திறக்கப்படும்.. தெரிந்து கொள்ள வேண்டியவை


மேலும் தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தமிழ்நாடு (Tamil Nadu) உடற்பயிற்சியக உரிமையாளர்கள்‌ மற்றும்‌ பயிற்சியாளர்கள்‌ நல சங்கத்தின்‌ சார்பில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும்‌ என முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனர்‌.


அதுக்குறித்து பரிசீலித்த முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) , வரும் 10 ஆம் தேதி முதல்‌ இயங்க அனுமதி அளித்துள்ளார். மேலும்‌, இதற்கான நிலையான வழிகாட்டு செயல்‌ முறைகள்‌ தனியாக வெளியிடப்படும்‌. அவற்றை கட்டாயம்‌ கடைபிடிக்க வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நான்கு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் ஜிம் (Gymnasiums) மற்றும் யோகா நிறுவனங்கள் (Yoga Institutes) ஆகஸ்ட் 5 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


ALSO READ |  Unlock 3 guidelines : இரவு ஊரடங்கு நீக்கம்; ஆகஸ்ட் 5 முதல் ஜிம்களை திறக்க அனுமதி


பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் ஆகஸ்ட் 31 வரை தொடர்ந்து மூடப்படும். இருப்பினும், ஊரடங்கு உத்தரவு 2020 ஆகஸ்ட் 31 வரை கண்டிப்பாக கட்டுப்பாட்டு மண்டலங்களில் தொடர்ந்து செயல்படுத்தப்படும், மேலும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே கட்டுப்பாட்டு மண்டலங்களில் அனுமதிக்கப்படும் எனவும் MHA தனது உத்தரவில் கூறியுள்ளது. 


கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலைத் தடுக்க, ஜிம் மற்றும் யோகா மையங்களை மத்திய அரசு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் மூடியது. "உடல் செயல்பாடு மற்றும் யோகா ஆரோக்கியத்திற்கு முக்கியம்" என்பதால், நாடு முழுவதும் அன்லாக் (Unlock 3) மூன்றாம் கட்டத்தின் போது உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதிதுள்ளது.