UPSC Topper: கோவை பெண் தமிழகத்தில் முதலிடம், ஏஐஆர் 42 பெற்று சாதனை
UPSC Topper: மாநில அளவில் முதலிடம் பெற்ற 25 வயதான சுவாதி ஸ்ரீ கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அகில இந்திய நிலையில்,( ஏஐஆர் ரேங்கிங்) இவர் 42 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சென்னை: UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்தன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 685 பேரில் 27 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாநில அளவில் முதலிடம் பெற்ற 25 வயதான சுவாதி ஸ்ரீ கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். தேர்வில் மூன்றாவது முயற்சியாக, அகில இந்திய நிலையில்,( ஏஐஆர் ரேங்கிங்) இவர் 42 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முந்தைய முயற்சியில் கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவருக்கு ஐஆர்எஸ் ஆஃபர் கிடைத்ததாகவும், எனினும், தனது விருப்பம் ஐஏஎஸ் ஆவதாக இருந்ததால் அந்த ஆஃபரை தான் நிராகரித்ததாகவும் சுவாதி கூறினார். 2020 UPSC தேர்வில் சுவாதி அகில இந்திய தர வரிசையில் 126 ஆவது இடத்தைப் பெற்றார் ( AIR 126) என்பது குறிப்பிடடத்தக்கது.
"எனது விடாமுயற்சியும் கடின உழைப்பும் எனக்கு இதைப் பெற்றுத் தந்தன என்று நான் நினைக்கிறேன். கொள்கை உருவாக்கம், திட்டங்கள் மற்றும் அது தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்றார் சுவாதி.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி விவசாயம் படிக்கும்போதே UPSC தேர்வுகளில் கவனம் செலுத்த முடிவு செய்தார் சுவாதி. "கல்லூரியில் நான் படித்த போது என்னால் அமைப்பு மற்றும் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு கருத்தையும் புரிதலையும் பெற முடிந்தது. அந்த புரிதல் இந்த நிலையை அடைய எனக்கு உதவியது. எனது பெற்றோரும் சகோதரியும் அனைத்து தடைகளையும் தாண்டி என்னுடன் துணையாக இருந்து எனக்கு உதவினார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | UPSC சிவில் சர்வீஸ் 2021 முடிவுகள் அறிவிப்பு; ஸ்ருதி சர்மா முதலிடம்
சுவாதி தனது பள்ளிப்படிப்பை நீலகிரியில் உள்ள குன்னூரில் முடித்தார். இப்போது அவர் கோயம்புத்தூரில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் வசிக்கிறார். அவரது தாயார் ஒரு தபால் உதவியாளராக ஓய்வுபெற்றுள்ளார். அவரது தந்தை, ஷேர் மார்கெட்டராக இருக்கிறார், சகோதரி கல்லூரியில் படிக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த சி ரம்யா, தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் (ஏஐஆர் 46), சென்னையின் சிவானந்தம் மூன்றாவது இடத்தையும் (ஏஐஆர் 87) பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற 780 பேரில் 44 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அகில இந்திய தரவரிசையில், ஸ்ருதி சர்மா முதல் இடத்தைப் பிடித்துள்ளார் (ஏஐஆர் 1). இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களையும் பெண்களே கைப்பற்ரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய நிலையில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள ஸ்ருதி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியாவார். இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
மேலும் படிக்க | பி.எஸ்சி முடித்தவர்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR