UPSC சிவில் சர்வீஸ் 2021 முடிவுகள் அறிவிப்பு; ஸ்ருதி சர்மா முதலிடம்

UPSC CSE 2021 Results: இன்று UPSC சிவில் சர்வீஸ்  2021 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இலிருந்து பார்க்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2022, 03:04 PM IST
UPSC சிவில் சர்வீஸ்  2021 முடிவுகள் அறிவிப்பு; ஸ்ருதி சர்மா முதலிடம் title=

UPSC CSE 2021: இன்று UPSC சிவில் சர்வீஸ்  2021 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அகில இந்திய தரவரிசையில், ஸ்ருதி சர்மா 1ம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களையுமே பெண்கள் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்துள்ள ஸ்ருதி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார். மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

UPSC CSE முதற்கட்டத் தேர்வு அக்டோபர் 10, 2021 அன்று நடத்தப்பட்டது, தேர்வு முடிவுகள் அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வு ஜனவரி 7 முதல் 16, 2022 வரை நடத்தப்பட்டு, முடிவுகள் மார்ச் 17, 2022 அன்று அறிவிக்கப்பட்டன. நேர்முகத்தேர்வின் கடைசிச் சுற்று ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி நிறைவடைந்தது.

மேலும் படிக்க | தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 

UPSC சிவில் சர்வீஸ் இறுதி முடிவுகள் 2021:  அறிந்து கொள்ளும் முறை

1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — upsc.gov.in

2.  முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் ‘UPSC சிவில் சர்வீஸ் இறுதி முடிவு 2021’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. முடிவு PDF கோப்பில் திரையில் தோன்றும்

4. பதிவிறக்கம் செய்து எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

UPSC சிவில் சர்வீஸ் இறுதி முடிவுகள் 2021: இந்த ஆண்டின் டாப்பர் பட்டியலைப் பார்க்கவும்

அனைத்திந்திய அளவில் முதல் 10 இடத்தை பிடித்தவர்கள்

1. ஸ்ருதி ஷர்மா

2. அங்கிதா அகர்வால்

3. காமினி சிங்லா

4. ஐஸ்வர்யா வர்மா

5.  உட்கர்ஷ் த்விவேதி

6. யக்ஷ் சௌத்ரி

7.  சம்யக் எஸ் ஜெயின்

8. இஷிதா ரதி

9. ப்ரீதம் குமார்

10. ஹர்கீரத் சிங் ரந்தாவா

2020 ஆம் ஆண்டில், UPSC CSE இறுதித் தேர்வில் மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றனர், அவர்களில் 545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள். தேர்வில் சுபம் குமார் முதல் இடத்தையும், ஜாக்ரதி அவஸ்தி இரண்டாவது இடத்தையும், அங்கிதா ஜெயின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

மேலும் படிக்க | பி.எஸ்சி முடித்தவர்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News