உத்தரபிரதேச மின்சார துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் இல்லத்தில் ப்ரீபெய்ட் மின்சார மீட்டர்களை நிறுவுவதற்கான தனது லட்சிய முயற்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்மா தனது அதிகாரப்பூர்வ காளிதாஸ் மார்க் இல்லத்தில் 25 KV திறன் கொண்ட ப்ரீபெய்ட் மீட்டரை பொறுத்தி முன்மாதிரியாக மாறியுள்ளார். குறித்த இந்த ப்ரீபெய்ட் மீட்டரில் பண இருப்பு தீர்ந்தவுடன் மின்சாரம் தானாக துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்.,  "அனைவருக்கும் மின்சாரம், போதுமான மின்சாரம், தடையற்ற மின்சாரம், சுத்தமான மற்றும் மலிவான மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும். இதற்காக, சரியான நேரத்தில் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம். இதனை உணர்த்தும் வகையில் தற்போது எனது அரசு இல்லத்தில் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர்களை நிறுவி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.



உத்திரபிரதேச மின்சார துறை அமைச்சர் ஒரு முன்மாதிரியாக தனது மாநிலத்தில் தன்னை பிரதிநிதிதுவப் படுத்தியுள்ள நிலையில், அவரது செயல் தனது சக ஊழியர்களை தங்கள் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் ப்ரீபெய்ட் மீட்டர்களை அனுமதிக்க கட்டாயப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மா, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைப் பற்றி தொடர்ந்து வளர்ந்து வரும் கருத்தை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகளில் ப்ரீபெய்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான முடிவு அக்டோபர் 29-அன்று எரிசக்தி துறையால் எடுக்கப்பட்டது.


இத்திட்டத்திற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சம் ப்ரீபெய்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இது மாநிலத்தின் முக்கிய நபர்களின் வீடுகளில் நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


"மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் மின்சாரத்தை செலுத்தவும் ஸ்மார்ட் கம் ப்ரீபெய்ட் மீட்டருக்கு திரும்ப வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், அரசுத் துறைகள் மற்றும் வீடுகளுக்கான மின் நிலுவைத் தொகை ரூ .13,000 கோடி வரை உள்ளது. இந்த நிலுவை தொகையினை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலுவைத் தொகையினை திரும்ப பெற ஏதுவாக மக்களுக்கு தவணை முறை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


நிலுவைத்தொகை பட்டியலை ஆராய்கையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும் கடனாளிகளாக அறியப்படுகிறார்கள். கடனளிப்பவர்களின் பட்டியலில் அரசாங்க அலுவலகங்களும் உயர்ந்த இடத்தில் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.


அனைத்து 75 மாவட்டங்களிலும் மின் திருட்டுகளை சரிபார்க்க பிரத்யேக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற 68 காவல் நிலையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.