மதுரை: மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி போடும் செயல்முறையை துவக்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பொதுமக்கள் மனதில் இருந்த இது குறித்த அச்சத்தையும் நீக்க முயன்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami), தற்போதைக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்ற முன்னணி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.


முதல்வர் தடுப்பூசி போட்டுக்கொள்வாரா என கேட்கப்பட்ட போது, அவர், “அனைவரும் நிச்சயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நீங்களும் நானும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பமும் என் குடும்பமும் இதை போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.


சில மாநிலங்கள் கோவாக்சினைப் (Covaxin) பயன்படுத்துவதில்லை என்று சுட்டிக்காட்டியபோது, ​​விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு இந்த தடுப்பூசிக்கான அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என்று பழனிசாமி கூறினார். "ஆரம்ப கட்டங்களில், ஒரு வித அச்சம் இருக்கக்கூடும். ஆனால் பின்னர் அது நீங்கிவிடும். முதலில் யார் தடுப்பூசியை போட்டுக்கொண்டது? TNGDA தலைவர் டாக்டர் செந்தில்.” என்று தெரிவித்தார் முதல்வர்.


பிரதம மந்திரி நரேந்திர மோடியின் (Narendra Modi) இடைவிடாத முயற்சிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இந்த முயற்சிகளால், இறுதியாக சாதாரண மக்களின் நலனுக்காக வெகுஜன அளவில் இது தொடங்கப்பட்டுள்ளது என்றார்.


ALSO READ: மருத்துவ கண்காணிப்பில் AIIMS Security Guard: தடுப்பூசிக்கு பிறகு பின்விளையுகளால் பாதிப்பு


தடுப்பூசியின் (Vaccine) முதல் டோஸ் கொடுக்கப்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும், தடுப்பூசி பெறுபவர் அடுத்த 42 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு கொரோனா வைரசுக்கு (Coronavirus) எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் பழனிசாமி கூறினார்.


தமிழகத்தின் (Tamil Nadu) மத்திய பிராந்தியப்களில் சனிக்கிழமை 31 இடங்களில் மருத்துவர்கள் உட்பட 362 முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகப்படியாக டாக்டர்கள் உட்பட 103 முன்னணி தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து திருச்சியில் 91, தஞ்சாவூரில் 69, கரூரில் 50, புதுக்கோட்டையில் 23, அரியலூரில் 14, நாகப்பட்டினத்தில் 10 மற்றும் பெரம்பலூரில் இரண்டு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.


திருச்சி ஜிஹெச்சில் தடுப்பூசி திட்டத்தை கண்காணித்த திருச்சி கேஏபிவி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் வனிதா கூறியதாவது: ஒரு நாளைக்கு நூறு டோஸ் திட்டமிடப்பட்டது. இருப்பினும், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மையமும் முதல் நாளில் 20 என்ற அளவை பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.


ALSO READ: COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR