மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது! அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மிம்மிக்ரி!
கள்ளக்குறிச்சி அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிரடியாய் பேசிய வைகைசெல்வன், மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது! என பஞ்ச் டயலாக் பேசி கைதட்டுக்களை பெற்றார்...
மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்று மோடி பேசுவதுபோலவே இந்தியில் பேசி மிம்மிக்ரி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன்... சிறை செல்லப் போகும் திமுக அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெறப் போகும் அதிமுகவை காட்டிக் கொடுத்த எட்டப்பன் பன்னீர்செல்வம் எனவும் கள்ளக்குறிச்சி அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிரடியாய் பேசினார் வைகைசெல்வன்.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி எம்ஜிஆர் திடலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது நகரக் கழகச் செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மோடியின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது, மோடியின் உத்தரவாதம் தமிழ்நாட்டில் நடக்காது என்றார்.
மோடியின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்று பேசியதற்கு பலத்த கரகோஷம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பேசிய அவர், பொன்முடிக்கு எம்எல்ஏ பதவியும் போச்சு, மந்திரி பதவியும் போச்சு, அவருடைய தொகுதியில அதிமுகவும் வரப்போகுது, வரப்போகும் இடைத்தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதி அதிமுக கோட்டை என்பதை எழுதி வச்சுக்கோங்க, அதற்காக கடுமையாக உழைச்சே தீரணும், நாம யாருன்னு நிரூபிச்சு காட்டணும் என்று கிண்டல் அடித்தார்.
மேலும், இலாகா இல்லாத ஒரு அமைச்சர் சிறையில் இருக்கலாமா என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை நம்பி செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், அவருக்கு மீன் வேணும்னா கிடைக்குமே தவிர, ஜாமீன் கிடைக்காது என்று கூறிய வைகைசெல்வன், அடுத்து ஐ.பெரியசாமியை ஒரு லட்சம் பணத்தை கட்டி சிறைக்குப் போக ரெடியா இருக்க சொல்லுங்க. அடுத்த இரண்டு மாதத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளே போகப்போறாரு, அடுத்து தங்கம் தென்னரசும் உள்ள போகப்போறாரு, அடுத்ததா அதிமுகவை காட்டிக் கொடுத்த எட்டப்பன் ஓபிஎஸ் இன்னும் இரண்டே மாதத்தில் உள்ள போகப் போறாரு என்றும் சாடினார்.
இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் இரா. குமரகுரு, முன்னாள் அமைச்சர் ப.மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மா.செந்தில் குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ்,உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மேலும் படிக்க | மழை பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை-கனிமொழி எம்.பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ