மழை பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை-கனிமொழி எம்.பி

தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை  சந்திப்பு

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Feb 28, 2024, 08:58 PM IST
  • கனிமொழி, தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்
  • அப்போது மத்திய அரசின் திட்டம் குறித்து பேசினார்
  • முழு விவரம் இதோ!
மழை பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை-கனிமொழி எம்.பி title=

தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை  சந்திதார். அப்போது அவர் பின்வருமாறு பேசியுள்ளார்:

அரசு என்ன திட்டம் கொண்டு வந்தாலும் திமுக அதை தடுக்க பார்க்கிறது என பிரதமர் கூறியது குறித்து கனிமொழியிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர், “மத்திய அரசு என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை தேர்தல் வருவதால் சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். தொடர்ந்து எத்தனையோ திட்டங்களை தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் பிரதமரை சந்திக்கும் போது கோரிக்கையாக வைக்கிறார்கள். இருந்தபோதிலும் எதையும் நிறைவேற்றிக் கொடுத்ததில்லை சமீபத்தில் வந்த புயல் மழை பாதிப்பின் நிவாரண தொகை கூட இதுவரையில் ஒன்றிய அரசு கொடுக்கவில்லை இதுதான் உண்மையான நிலை எந்த நல்ல திட்டத்தையும் தமிழ்நாடு அரசு தடுத்ததில்லை” என்று கூறினார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம்? - நீதிபதி விளக்கம்

பத்திரிக்கை விளம்பரம் குறித்து கேட்டபோது, “கோடிக்கணக்கான பணத்தை  விளம்பரத்திற்கு செலவு செய்யும் கட்சி பாஜக அவர்கள் செய்யும் விளம்பரத்தில் கூட தேசிய கொடியை போட்டு நான் பார்த்ததும் இல்லை” என்று கூறினார். 

மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என தெரிவித்ததற்கு வீடு கட்டும் திட்டத்தில் கூட 75% பங்கு பணத்தை தமிழக அரசு தான் கொடுக்கிறது அவர்கள் 70 ஆயிரம் ரூபாய் பணம் மட்டும் தான் கொடுக்கிறார்கள் அதை வைத்து யாரும் வீடு கட்ட முடியாது மீதமுள்ள தொகையை மாநில அரசுதான் கொடுக்கிறது. ஆனால் அந்த வீட்டிற்கு பெயர் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம் என வைத்துள்ளது இதில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. எனக்கு தெரிந்த அளவில் பல மாநிலத்தில் இருந்து வரும் பிரமுகர்கள் இதற்கு ஏன் முதல் மந்திரி திட்டம் என பெயர் வைக்கவில்லை என்ற கேட்கிறார்கள் என்று கூறினார். 

திமுக என்ற  ஒரு கட்சியே இருக்காது என பாரத பிரதமர் கூறியதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதை கூறிய நிறைய பேரை நான் பார்த்துள்ளேன் ஆனால் அவர்கள் தான் காணாமல் போய் உள்ளார்கள் திமுக அப்படியே தான் இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் இருக்கும் போதிலிருந்தே ராக்கெட் ஏவுதலும் அமைக்கும்  திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறார்கள் அதன் பிறகு பலமுறை திராவிட முன்னேற்ற கழகம் பாராளுமன்றத்தில் பேசிய பிறகு நிலம் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு விரைவாக இடத்தை கொடுத்து இருக்கிறோம். அதுமட்டுமின்றி இப்பொழுது அறிவித்துள்ள பட்ஜெட்டிலும் தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். 

மக்கள் பாஜக பக்கம் வர திரும்பி இருக்கிறார்கள் சித்தாந்தம் ஒற்றுப் போகிறது என கூறியது குறித்து கேட்டதற்கு எனக்கு தெரிந்து நிச்சயமாக இல்லை தமிழக மக்கள் பாஜக பெரும்பான்மை மக்களை மதத்தை வைத்து அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள்.அரசியல் வேறு, மதம் வேறு, என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். அதுமட்டுமின்றி பெரும்பான்மை மக்களுக்கு யார் அவர்களுடன் இருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் உரிமைக்காக போராடுவதும் திராவிட இயக்கம்தான் என்பதையும் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள்” கூறினார். 

மேலும் படிக்க | அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி கொடுத்த உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News