ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தல்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ "பிரதமர் மோடி நாட்டிற்கு சாபக்கேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபக்கேடு. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார் எனவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசியிருந்தார். 


இந்நிலையில், இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரதப் பிரதமர் மோடி அவர்களை நிதானம் இழந்து தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் நரச நடையில் ஒருமையில் விமர்சிக்கும் வைகோ அவர்களை தமிழக பாஜக கண்டிக்கிறது .கள்ளத்தோணி முதல் ஐயோ கொலைப்பழி போலி நாடகங்களால் தீக்குளித்த மதிமுக தொண்டர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். 



மேலும், "விதவிதமாக உடை மாற்றி தினம் ஒரு நாடு விமானத்தில் மோடி போதையில் செல்வதாக கூறும் கள்ளத்தோணி கட்டுமரங்களே விதவிதமாக விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்த கட்சி இலங்கைத்தமிழரை கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரசுடன் கூட்டணிக்கு காத்திருக்கும் வைகோ இலங்கை தமிழர் பற்றி இனிமேலும் பேசதகுதியில்லை" என்றும் கூறியுள்ளார்.