சென்னை: சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட ஓஎன்வி விருதை திருப்பித் தருவதாக அவர் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'விருதைத் திருப்பித் தருகிறேன்...' என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, வைரமுத்து (Vairamuthu) எழுதிய நாட்படு தேறல் எனும் கவிதைத் தொகுப்பின் ஆறாவது பாடலுக்காக கேரளாவின் மிகப்பெரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி விருதை அவருக்கு அளிப்பதாக அந்த அமைப்பு அறிவித்தது. 



2016 ஆம் ஆண்டு காலமான கவிஞர் ஓ.என்.வி. குருப்பின் நினைவாக ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளைச் சேர்ந்த கவிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மலையாள பல்கலைக்கழக துணைவேந்தர் அனில் வல்லத்தோல் மற்றும் கவிஞர்கள் ஆலன்கோடு லீலாகிருஷ்ணன் மற்றும் பிரபா வர்மா ஆகியோர் அடங்கிய நடுவர் மன்றம் இந்த ஆண்டு விருதுக்கு வைரமுத்துவை தேர்வு செய்தது.


எனினும், கவிஞர் வைரமுத்துவுக்கு விருது அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே இது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. 


#MeToo விவகாரத்தில் பின்னணிப் பாடகி சின்மயி (Chinmayi) உட்பட சில பெண்கள் அவர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு புகார் அளித்திருந்தனர். இப்படிப்படட் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவருக்கு இத்தகைய உயரிய விருதை அளிக்கக்கூடாது என மலையாள நடிகை பார்வதி உட்பட பல நடிகைகள் கண்டன குரல் எழுப்பினர். இவர்கள் மட்டுமின்றி இன்னும் பல எழுத்தாளர்களும் பெண்கள் உரிமை ஆர்வலர்களும் இந்த விருதுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.



முதலில் ஓஎன்வி அமைப்பு இந்த கண்டன குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை. இது இலக்கியம் சார்ந்த விருது என்றும் இது கவிஞர் வைரமுத்துவின் இலக்கிய படைப்புக்காக வழங்கப்பட்டது என்றும் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்படது. எனினும், வைரமுத்துவுக்கு விருது வழங்க பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுப்பெறவே, இதைப் பற்றி பரிசீலிப்பதாக ஓ.என்.வி கலாச்சார அகாடமி தெரிவித்தது. எனினும், அகாடமியின் இந்த நிலைப்பாட்டுக்கு சீமான், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ALSO READ: பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்


இந்நிலையில் கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இது தொடரபாக அவர் ஒரு ட்வீட் செய்துள்ளார். விருதுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையான மூன்று லட்சம் ரூபாயை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.


தன் மீது காழ்புணர்ச்சி கொண்டுள்ள சிலரது தீய எண்ணம் காரணமாக இவை எல்லாம் நடப்பதாக அவர் தெரிவித்தார். அவர்களது குறுக்கீட்டால் விருது மறுபரிசீலனை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தன்னையும் கவிஞர் ஓஎன்வி குரூப்பையும் சிறுமைப்படுத்துவது போல் இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார். 


இத்தனை சர்ச்சைகளுக்கு இடையில் இந்த விருதை பெறுவதை தான் தவிர்க்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். மலையாள மக்கள் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த விருதுக்கான பரிசு தொகையை கேரள (Kerala) முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


ALSO READ: #metoo: சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசியர் மீது முன்னாள் மாணவி பாலியல் தொல்லை புகார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR