Me Too விவகாரத்தில் விஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டிய பாடகி சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கம்.....
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். இதையடுத்து, #MeToo மூலம் நடிகர் அர்ஜூன், தியாகராஜன் ஆகியோர் மீது நடிகைகள் புகார் தெரிவித்துள்ள விவகாரம், திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக சின்மயி, இது குறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என இதனால் மெம்பர்ஷிப் ரத்துசெய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது." என்று தெரிவித்திருந்தார்.
Because I am asked on why I didn’t pay Dubbing Union - I was expressly told that I needn’t pay anything for a while since the dubbing union had court cases. But 10% of my dubbing income would be taken in cash. No receipts. No signs. No vouchers.
— Chinmayi Sripaada (@Chinmayi) November 17, 2018
இதைத் தொடர்ந்து "மீடூ விவகாரத்தில் தனது குரல் ஓங்கியதன் விளைவாகத்தான் தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியால் தான் நீக்கப்பட்டுள்ளேன். எனது சந்தாவாக 5 லட்சம் கேட்கப்பட்டது. யூனியன் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நான் சந்தா செலுத்தத் தேவையில்லை தனக்குக் கூறப்பட்டது அதனால்தான் கட்டவில்லை. தன் சம்பளத்தில் இருந்து க்ஷ்10% யூனியனுக்கு ரொக்கமாகச் சென்ற பணத்துக்கு எந்த ஒரு ரசீதும் தரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.