"பன்முகத்தன்மை கொண்ட வாஜ்பாய் போன்ற தலைவரை இனிமேல் பார்க்க முடியாது" - டெல்லியில் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்...!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், நிர்வாகத்திறன் மிக்க வாஜ்பாய் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு! 


முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஜூன் 11-ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வந்தநிலையில், நேற்று மாலை 5.57 மணியளவில் சிகிச்சைப்பலனின்றி காலமானார். இதையடுத்து, டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இந்நிலையில், நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.  


இதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள இல்லத்தில் வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்..... இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், நிர்வாகத்திறன் மிக்க வாஜ்பாய் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு என்றும் 50 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் வாஜ்பாய் என்றும் தமிழக முதலவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.