அஜித் நடித்த வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் அஜித்தின் படம் என்பதால், நேற்று முதலே ரசிகர்கள் தியேட்டர் முன்பு டிக்கெட் எடுக்க காத்திருந்த வண்ணமாக இருந்தனர். முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என ஆவலாக இருந்த ரசிகர்கள் நள்ளிரவு முதல் ஆட்டம் பாட்டத்துடன் படம் வெளியாவதை கொண்டாடினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அஜித் ரசிகர்கள் பாலை திருடலாம் - பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை


கோவையிலும் வலிமை படம் வெளியாகும் திரையரங்கு முன்பு அஜித் ரசிகர்கள் குவிந்திருந்தனர். காந்திரபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கில் 5 மணிக்கு காட்சி துவங்கியதும் ஏற்கனவே டிக்கெட் எடுத்து இருந்த ரசிகர்கள் மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.



மீதமுள்ள ரசிகர்கள் அடுத்த காட்சிக்காக காந்திருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திரையரங்கு முன்பு ரசிகர்கள் குவிந்திருந்த பகுதியை நோக்கி பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.



இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் ரசிகர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்துக்கு காட்டூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 


மேலும் படிக்க | Bigg Boss Ultimate-ல் இனி சிலம்பாட்டம்: கமலுக்கு பதில் வருகிறார் சிம்பு!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR