ஒரே பெண்ணுடன் 3 மத முறைபடி திருமணம்! அசரவைத்த அரசு ஊழியர்
ஒரே பெண்ணை மும்மத முறைப்படி திருமணம் செய்த இளைஞரால் நண்பர்கள், உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சின்ன எரகலித்தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 30 வயதுடைய இவர் விஏஓவாக பணியாற்றி வருகிறார். இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு, பெற்றோர் தங்களது சமூகத்திலேயே திருவையாறு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்திருந்தனர்.
சிறு வயது முதலே புருஷோத்தமன் அனைத்து சமூகத்தினருடனும் சேர்ந்து வளர்ந்துள்ளார். மேலும் இவருக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிக அளவில் நண்பர்களாக உள்ளனர். இதன் பலனாக மூன்று மத வழிபாடுகளிலும் புருஷோத்தமன் ஈர்ப்புகொண்டார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இந்நிலையில், தனது திருமணத்தை வித்தியாசமாகவும், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விததத்திலும் நடத்த வேண்டுமென்று புருசோத்தமன் எண்ணினார்.
பின்னர் இவர் தனது விருப்பத்தை நண்பர்கள், பெற்றோர், மணப்பெண் வீட்டார் என அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இவரது விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
இதன்படி, அனைவரின் சம்மதத்தோடு இஸ்லாமிய, கிறிஸ்தவ முறைப்படி முதல் நாள் திருமணம் செய்யவும், மறுநாள் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்யவும் திட்டமிட்டனர்.
இதற்காக மார்ச் 27ம் தேதி இந்து முறைப்படி திருமண நடப்பதாக ஒரு பத்திரிக்கையும், 26ம் தேதி இஸ்லாமியம், கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடப்பதாக 2 வேறு பத்திரிக்கையும் என மூன்று விதமான பத்திரிக்கைகள் அச்சிட்டுள்ளார் புருசோத்தமன்.
மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அவர்களின் மதத்தைப் பொருத்து விதவிதமான பத்திரிக்கைகளை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் புருசோத்தமன்.
மேலும் படிக்க | கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை எரித்து கொன்ற மகள்..!
அதன்படி, நேற்று மாலை புருஷோத்தமன்-புவனேஸ்வரி திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடத்தது. அப்போது பள்ளிவாசல் இமாம் இத்திருமணத்தை நடத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து, அடுத்ததாக கிறிஸ்தவ முறைப்படி பாஸ்டர் திருமணத்தை நடத்திவைத்தார். கடைசியாக, மார்ச் 27ம் தேதி காலை 7.30 - 9 மணிக்குள் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
ஒரேபெண்ணை மும்மத முறைப்படி திருமணம் செய்து அசத்திய புருஷோத்தமன் இதுகுறித்து கூறுகையில், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த திருமணத்தை நடத்தியதாக கூறினார்.
மேலும், இந்து சமுதாயத்தை சேர்ந்தவர் இஸ்லாமிய, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தது ஆச்சரியதை ஏற்படுத்தியது என்று உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | DMK பிரமுகரை ஆள் வைத்து கொன்ற மகள் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR