வர்தா புயல்: பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்!!
வர்தா புயல் பாதிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: வர்தா புயல் பாதிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வர்தா புயலால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் மீதும் மரங்கள் விழுந்த பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
புயல் பாதித்த எண்ணுார், திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்தார்.
இந்நிலையில் வர்தா புயல் பாதிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.